நெருக்கடி வேளையில் பதிலளித்து

பாதுகாத்து நடத்திடுவார்

உன்னோடு இருந்து ஆதரித்து

தினமும் உதவிடுவார்

 

1.

நீ செலுத்தும் காணிக்கைகள்

நினைவு கூர்ந்திடுவார்

நன்றி பலி அனைத்தையுமே

பிரியமாய் ஏற்றுக்கொள்வார் –  நெருக்கடி

 

2.

உன் மனம் விரும்புவதை

உனக்குத் தந்திடுவார்

உனது திட்டங்களெல்லாம்

நிறைவேற்றி முடித்திடுவார் –  நெருக்கடி

 

 

3.

உனக்கு வரும் வெற்றியைக் கண்டு

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்

நம் தேவன் நாமத்திலே

வெற்றிக் கொடி நாட்டிடுவோம் –  நெருக்கடி

 

 

4.

இரதங்களை நம்பும் மனிதர்

இடறி விழுந்தார்கள்

தேவனை நம்பும் நாமோ

நிமிர்ந்து நின்றிடுவோம்.-  நெருக்கடி

 

 



nerukkadi velaiyil pathilaliththu

bathukaththu nataththiduvar

unnodu irunththu aadhariththu

thinamum udhaviduvar

 

1.

ni seluththum kanikkaikal

ninaivu kurnththiduvar

nanri pali anaiththaiyume

biriyamay eerrukkolvar –   nerukkadi

 

2.

un manam virumbuvathai

unakkuth dhanththiduvar

unathu thidtangkalellam

niraiverri mudiththiduvar –   nerukkadi

 

 

3.

unakku varum verriyaik kandu

makizssiyil aarbparibbom

nam thevan namaththile

verrik kodi naddiduvom –   nerukkadi

 

 

4.

iradhangkalai nambum manidhar

itari vizunththarkal

thevanai nambum namo

nimirnththu ninriduvom.-   nerukkadi